மாகாணங்களுக்கென தனியான பிரதி சுகாதார சேவை பணிப்பாளர் நாயகங்கள் நியமனம் – சுகாதார அமைச்சு அறிவிப்பு!

நாட்டில் கொவிட் தடுப்பு நடவடிக்கைகளை மாகாண மட்டத்தில் முன்னெடுப்பதற்காக பிரதி சுகாதார சேவை பணிப்பாளர் நாயகங்கள் 9 பேர் நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்றின் வேகம் நாட்டை அச்சசுறுத்தும் நிலையில் அனைத்து மாகாணங்களும் சென்று கொவிட் தடுப்பு நடவடிக்கைகளை கண்காணித்து தேவையான வசதிகளை வழங்குவதற்காக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதுவரையில் நாடளாவிய ரீதியில் 105 கொவிட் தடுப்பு நிலையங்களில் 19 ஆயிரத்திற்கும் அதிகமான கட்டில்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கொழும்பு அரசியலில் அதிரடி மாற்றம்: பிரதமரானார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ!
இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தொடர்பில் வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது - ஆணையாளர் நாயகம் அறிவ...
கோறளைப்பற்றிலும் அறுபது வயதிற்கு மேற்பட்ட பொது மக்களுக்கான கொரோனா தடுப்பூசி ஏற்றும் பணிகள் முன்னெடுப...
|
|