மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை மேலும் ஒரு வாரங்களுக்கு நீடிப்பு – எல்லைகளில் தீவிர சோதனைகளுக்கும் உத்தரவு!
Friday, October 15th, 2021
மாகாணங்களுக்கு இடையில் அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடுகளை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை மேலும் இறுக்கமாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இன்றையதினம் ஜனாதிபதி தலைமையில் இணைவழியாக இடம்பெற்ற கொவிட் ஒழிப்புக்கான தேசிய செயலணி கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அதற்கமைய, எதிர்வரும் 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் வரும் விடுமுறையுடன் ஆரம்பமாகும் நீண்ட வார இறுதி விடுமுறைகள் காரணமாக மாகாணங்களுக்கு இடையிலான எல்லைகளில் கடுமையான சோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்பு பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
ஈ.பி.டி.பியின் எழுக தமிழ் கூட்டு எழுச்சி பேரணியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் உணர்வெழுச்சியுடன் பங்கேற...
நல்லூர் சங்கிலியன் தோப்பு பகுதி மக்களது வாழ்வாதார பிரச்சினைகள் குறித்து ஈழமக்கள் ஜனநாயக கட்சி ஆராய்...
அனைத்து மத வழிப்பாட்டுத் தலங்கள் தொடர்பில் புதிய சுகாதார வழிகாட்டுதல்கள் வெளியீடு!
|
|
|


