மஹிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் இவ்வாறு இல்லை – அமைச்சர் அர்ஜூன!

இந்த அரசாங்கம் கிரிக்கெட் விளையாட்டை சீரழித்துவிட்டது என அமைச்சர் அர்ஜூன ரணதுங்க குற்றம் சுமத்தியுள்ளார்.
தற்போதைய அரசாங்கத்தினால் கிரிக்கெட் விளையாட்டு நலிவடைந்துள்ளது. கடந்த மஹிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் விளையாட்டுத்துறை அமைச்சராக கடமையாற்றிய மஹிந்தானந்த அலுத்கமகே, சூதாட்டக்காரர்கள் கிரிக்கெட் விளையாட்டில் தலையீடு செய்ய அனுமதிக்கவில்லை.
அரசியல் ரீதியான கொள்கைகள் எவ்வாறு இருப்பினும் அலுத்கமகே சிறந்த முறையில் தமது கடமைகளை நிறைவேற்றியிருந்தார். இன்றோ பின் கதவால் வந்தவர்கள் கிரிக்கெட் விளையாட்டை நாசம் செய்துள்ளனர்.விளையாட்டுத்துறை இன்று சூதாட்டக்காரர்களில் தங்கியிருக்க வேண்டிய நிலையை அடைந்துள்ளது என அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
Related posts:
உச்ச நீதிமன்றில் பி.சி.சி.ஐ-க்கு பலத்த அடி!
ஊரடங்குச் சட்டம் தளர்வை அடுத்து நாடுமுழுவதும் 4700 பஸ்கள் போக்குவரத்து சேவையில் - பொது போக்குவரத்து ...
நாடாளுமன்ற கட்டடத்தை புனரமைப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன - நிதி இரா...
|
|