மஹா சிவராத்திரி விரதம் இன்று அனுஷ்டிப்பு – சிறப்பு பூசை வழிபாடுகளுக்கும் ஏற்பாடு!

Thursday, March 11th, 2021

உலகவாழ் இந்துக்களால் இன்று முதல்முதற் கடவுள் சிவபெருமானுக்கு உரிய விதரமான மஹா சிவராத்திரி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.

வருடாந்தம் மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச சதுர்த்தசி திதியில் மஹா சிவராத்திரி விரதம் அனுஷ்டிக்கப்படும்.

அத்துடன் இந்த நாளின் சிறப்புகள் குறித்து கருட புராணம், கந்த புராணம், பத்ம புராணம், அக்னி புராணம் உள்ளிட்ட பல்வேறு நூல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளன.

பிரளய காலத்தில் பிரம்மனும் அவரால் சிருஷ்டிக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும் அழிந்துவிட்ட நிலையில், இரவுப் பொழுதில் அம்பிகை உமாதேவி, பரமேஸ்வரனை நினைத்து பூஜை செய்த நாளாகவே சிவராத்திரி விதரம் என இதிகாசங்கள் கூறுகின்றன.

சிவராத்திரியன்று சிவ வழிபாட்டில் ஈடுபட்டால் வாழ்வில் துன்பங்கள் நீங்கி, இன்பம் பெறலாம் என்றும் தெரியாமல் செய்த பாவங்களுடன், தெரிந்தே செய்த பாவங்களும் நம்மைவிட்டு நீங்கிப் போகும் என்பது இந்துக்களின் நம்பிக்கையாகும்.

இந்நிலையில் குறித்த விரதத்தினை முன்னிட்டு இன்று ஆலயங்களில் 04 சாம பூசைகளும் விசேட வழிபாடுகளும் இடம்பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அத்துடன் குறித்த விதரத்தினை கொண்டாடுவதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ச பல ஆலங்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபா நிதியும் ஒதுக்கீடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: