மஹாபொல அறக்கட்டளை நிதி முறைகேடு தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் விசாரணை!

Tuesday, December 8th, 2020

கடந்த அரசாங்கத்தின் காலத்தில் மஹாபொல அறக்கட்டளை நிதியிலிருந்து ஒரு பில்லியனுக்கும் அதிகமான ரூபாயை முறைகேடாகப் பயன்படுத்தியது குறித்து விசாரிப்பதற்கான பொறுப்பு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக வர்த்தக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார எழுப்பிய வாய்மூல விடைக்கான கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பாக பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

எவ்வித காலதாமதமும் இன்றி மஹாபொல உதவித்தொகையை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், நிலுவைத் தொகை அனைத்தும் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். மகாபோலா அறக்கட்டளை நிதியத்தை அபிவிருத்தி செய்ய, ஆளும் கட்சி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து புதிய வேலைத்திட்டமொன்று செயற்படுத்தப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: