மஹர சிறையில் ஏற்பட்ட பதற்ற நிலைமை தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் ஊடக அறிக்கை!

Wednesday, December 2nd, 2020

கைதிகளுக்கோ சிறைச்சாலை அதிகாரிகளுக்கோ எந்தவித பாதிப்புக்களும் ஏற்படாத வகையில் பொலிஸாரும் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரும் சிறைச்சாலை அதிகாரிகளுடன் இணைந்து நிலைமையை வெற்றிகரமாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

மஹர சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட பதற்ற நிலைமையை கட்டுப்படுத்த சிறைச்சாலை அதிகாரிகளுடன் இணைந்து ஒன்றிணைந்த விஷேட நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரட்ன, பொலிஸ் மா அதிபர் சி. டி விக்ரமரட்ணவுக்கு நேற்று(01) பணித்துள்ளார்.

சிறைச்சாலையில் உள்ள கைதிகள் நேற்று(01) மீண்டும் மஹர சிறைச்சாலைக்குள் இதேபோன்ற பதற்ற நிலையை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய கைதிகளுக்கோ சிறைச்சாலை அதிகாரிகளுக்கோ எந்தவித பாதிப்புக்களும் ஏற்படாத வகையில் பொலிஸாரும் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரும் சிறைச்சாலை அதிகாரிகளுடன் இணைந்து நிலைமையை வெற்றிகரமாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதுடன். சிறைச்சாலையின் நிர்வாகத்தை சிறைச்சாலை அதிகாரிகளிடம் கையளித்துள்ளனர்.

டிசம்பர் 29, 2020 அன்று மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற நிலையைத் தொடர்ந்து இந்த சம்பவம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: