மழை பொய்த்ததால் விவசாயிகள் ஏமாற்றம்!

Friday, November 11th, 2016

மழை இன்மையால் பல வயல் காணிகளில் நெற்செய்கை மேற்கொள்ளப்படவில்லை என வவுனியா மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

நெற்செய்கையை மேற்கொள்ளவிருந்த விவசாயிகள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். தற்போது பெய்யும் மழையால் நெற்செய்கை செய்ய முடியாது. புழுதிச் செய்கை மட்டுமே மேற்கொள்ளப்படுகின்றது. பலகை நெற்செய்கை மேற்கொள்ள மழை போதாதுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு மழை ஏமாற்றிவிட்டது. நவம்பர் மாதம் வழமையாக பசளையிட்டு மருந்து விசப்படும். இந்தமுறை வயல்களில் இன்னமும் விதைப்பே நடக்கவில்லை – என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

3758-1-a69467fa1129913f79523596ec93be5a

Related posts: