மழை அதிகரிக்கும் சாத்தியம் – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!
Thursday, December 15th, 2022
நாட்டின் வடக்கு, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் 17ஆம் திகதிமுதல் மழையில் அதிகரிப்பை எதிர்பார்க்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பல மழை ஏற்படக்கூடும்.
மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளையில் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களைக் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மூன்று மாகாணசபைகளுக்கான தேர்தல் நடக்கும் வாய்ப்பு?
கைகலப்பு: கால வரையறையின்றி மூடப்படும் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள்!
நகர அபிவிருத்தி அதிகார சபையினால் ஆரம்பிக்கப்பட்ட 11 அபிவிருத்தி திட்டங்களை துரிதமாக நிறைவேற்றுவதற்கு...
|
|
|


