மலேரியாவை முற்றிலும் ஒழித்தநாடு இலங்கை – உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு!
Tuesday, September 6th, 2016
மலேரியா காய்ச்சல் முற்றிலும் ஒழிக்கப்பட்ட நாடாக இலங்கையை உலக சுகாதார அமைப்பு (WHO.) அறிவித்துள்ளது.
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் மாலத்தீவுகளுக்குப் பிறகு இத்தகைய சிறப்பை இலங்கை எட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது. கொசுக்களின் மூலம் பரவும் மலேரியா காய்ச்சல், உலகம் முழுவதும் பரவலாக காணப்படும் நோயாக உள்ளது. கடந்த 1970, 80-ஆம் ஆண்டுகளில் இலங்கையின் பல பகுதிகளில் மலேரியாவின் தாக்கம் தீவிரமாக இருந்தது. அதன் பிறகு அந்நாட்டு அரசு மேற்கொண்ட பல்வேறு சுகாதார நடவடிக்கைகளின் காரணமாக மலேரியாவைப் பரப்பும் கொசுக்களின் உற்பத்தி படிப்படியாகக் குறைந்தது. இந்த நிலையில், மலேரியா காய்ச்சல் முற்றிலும் ஒழிக்கப்பட்ட நாடாக இலங்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய பிராந்திய இயக்குநர் டாக்டர் பூனம் கேத்ரபால் சிங், “இலங்கை நாட்டின் குறிப்பிடத்தக்க சாதனை இது’ என்றார். உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் இந்தியா, நேபாளம், இந்தோனேசியா, வங்கதேசம், கொரியா உள்ளிட்ட 11 நாடுகள் அங்கம் வகிப்பது குறிப்பிடத்தக்கது.

Related posts:
|
|
|


