மறைந்த முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கவின் பூதவுடலுக்கு பாராளுமன்றத்தில் இறுதி அஞ்சலி!

Wednesday, December 28th, 2016

மறைந்த முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கவின் பூதவுடலுக்கு பாராளுமன்றத்தில்  இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

இன்று காலை 10.30க்கும் 11.30க்கும் இடையில் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பாராளுமன்றத்திற்கு வருகை தருமாறு சபாநாயகர் கரு ஜயசூரிய அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அறிவித்துள்ளார்.

இதன் பின்னர் அவரது பூதவுடல் ஹொரணையில் அவரது இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு இறுதிக்கிரியை முழு அரச மரியாதையுடன் மேற்கொள்ளப்பட வேண்டுமென்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமரும், சிரேஷ்ட அரசியல்வாதியுமான ரட்ணசிறி விக்ரமநாயக்க (83) நேற்று கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் காலமானார். 1960ம் ஆண்டு தேர்தலில் மக்கள் ஐக்கிய முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றத்தில் பிரவேசித்த இவர் பின்னர் சுயாதீனமாக போட்டியிட்டு 1960ம் ஆண்டு ஹொரணைத் தொகுதியில் வெற்றி பெற்றார். 1962ம் ஆண்டில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டார்.
1965 மற்றும் 1970ம் ஆண்டு தேர்தல்களில் இக்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி ஹொரணைத் தொகுதியில் தொடர்ச்சியாக வெற்றிபெற்றார். 1970ம்; ஆண்டு முதல் 1977ம் ஆண்டு வரையில் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவின் அரசாங்கத்தில் அரச பெருந்தோட்ட கைத்தொழில், நீதித்துறை அமைச்சுப் பதவிகளை வகித்தார். சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, மேல் மாகாணத்தில் முதலமைச்சராக பதவி வகித்தபோது, விக்ரமநாயக்க மாகாண அமைச்சராக பணியாற்றினார்.

1994ம் ஆண்டுக்கு பின்னர் பொதுஜன ஐக்கிய முன்னணியின் அரசாங்கத்தில் பெருந்தோட்டத்துறை , பொதுநிர்வாகம், புத்தசாசன அமைச்சராக பணியாற்றினார்.2000ம் மற்றும் 2005ம் ஆண்டுகளில் இரண்டு முறை நாட்டின் பிரதமராக பதவி வகித்தார். சமீபகாலத்தில் இவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட துணைத் தலைவராகவும், செயலாளராகவும் செயற்பட்டார்.

ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராகவும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆலோசகராகவும் இவர் பணியாற்றியுள்ளார். ஹொரணை தேர்தல் தொகுதிக்கும், களுத்துறை மாவட்டத்திற்கும், விசேடமாக நாட்டிற்கும் பாரிய சேவையை ஆற்றியுள்ளார்.

3-3

Related posts: