மறுசீரமைக்கும் வேலைத்திட்டம் தொடர்பில் மின்சார தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது – மின்சக்தி அமைச்சு தெரிவிப்பு!

Friday, April 21st, 2023

இலங்கை மின்சார சபையை மறுசீரமைக்கும் வேலைத்திட்டம் தொடர்பில் மின்சார தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் கஞ்சன விஜேசேகரவினால் அனைத்து தொழிற்சங்கங்களையும் அழைத்து இது தொடர்பான நடைமுறை தொடர்பில் குறிப்பிட்ட விளக்கமளித்ததாக மின்சக்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இக்கலந்துரையாடலில் மின்துறையுடன் தொடர்புடைய 31 தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டதுடன், மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கான முன்மொழிவுகளையும் அவர்கள் முன்வைத்துள்ளனர்.

சீர்திருத்தக் கட்டமைப்பைத் தயாரிப்பது தொடர்பான எதிர்கால நடவடிக்கைகளில் அந்தப் பிரேரணைகள் தொடர்பில் கவனம் செலுத்தத் தயார் என அமைச்சர் அங்கு குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, உத்தேச இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான கட்டமைப்பு, கொள்கைகள் மற்றும் பாதை வரைபடம் தொடர்பில் நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:


பொதுத் தேர்தல்: செலவு 20 பில்லியனைத் தாண்டலாம் - தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம்!
ஆண்டின் நான்காம் காலாண்டில் அரச ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவு தொடர்பில் அரசாங்கம் பரிசீலிக்கும் - ...
சிங்கப்பூரில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று - முகக்கவசங்களை அணியுமாறு சுகாதார தரப்பினர் அறிவுற...