மறவன்புலோவில் தற்கொலை அங்கி வைத்திருந்த நபர் கிளிநொச்சியில் கைது!

மறவன்புலவு பகுதியில் தற்கொலை அங்கி மற்றும் கிளைமோர் குண்டுகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நபர் கிளிநொச்சி, அக்கராயன் பகுதியில் வைத்து இன்று மதியம் 12 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது..
மறவன்புலவு பகுதியில் தற்கொலை அங்கி, கிளைமோர் உள்ளிட்ட அபாயகரமான வெடிபொருட்களை மறைத்து வைத்திருந்த நிலையில் பொலிஸாரினால் குறித்த வெடி பொருட்கள் மீட்டிருந்தனர்.
இந்நிலையில் குறித்த வெடிபொருட்களை வைத்திருந்த சந்தேகநபர் பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த நிலையில் கிளிநொச்சி, அக்கராயன் பகுதியில் வைத்து குறித்த நபரை கைது செய்துள்ளனர்.
Related posts:
ஓய்வு பெறவுள்ள பிரதம நீதியரசரின் சேவைக்கு ஜனாதிபதி பாராட்டு!
கொரோனா தொற்று: கட்டாரிலுள்ள இலங்கை தூதரகம் பூட்டு!
ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய தேங்காய் எண்ணெய் அடங்கிய ஏனைய கொள்கலன்கள் இந்த வாரம் மீள் ஏற்றுமதி!
|
|