மருந்துகளின் விலைகளைக் குறைப்பதற்கான பொறிமுறை இன்று வெளியீடு!
Friday, September 23rd, 2016
மருந்துகளின் விலைகளைக் குறைப்பதற்கான வழிமுறை இன்று வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று நடைபெறவுள்ள சேனக பிபிலே ஞாபகார்த்த நிகழ்வில் மருந்துகளின் விலைகளைக் குறைப்பதற்கான வழிமுறை வெளியிடப்படும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இதற்கமைய 30 க்கும் மேற்பட்ட மருந்து வகைகளின் விலைகள் குறைவடையும் என பேருவளையில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டிருந்த அமைச்சர் சுட்டிக்காட்டினார். இதன் பிரகாரம் பேராசிரியர் சேனக பிபிலே கொள்கை இன்று முதல் நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாகவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts:
கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி!
தேவையற்ற பயணங்களை தவிர்த்துக் கொள்ளுமாறு இராணுவத் தளபதி அறிவிப்பு!
கொரோனா தொற்றாளர்களில் 70 வீதமானவர்களிற்கு வைரஸ் இருப்பதை கண்டறிய முடியாத நிலை - அச்சத்தில் அரச வைத்...
|
|
|


