மயிலிட்டி துறைமுகம் நவீன வசதிகளுடன் அபிவிருத்தி!

Saturday, June 30th, 2018

யாழ்.மயிலிட்டி துறைமுகம் சுமார் 200 மில்லியன் ரூபா செலவில் ஆழப்படுத்தப்பட்டு நவீன வசதிகளுடன் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.
கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சு மற்றும் யூ.என்.டீ.பி ஆகியன இணைந்து மேற்படி மயிலிட்டி துறைமுகத்தை அபிவிருத்தி செய்யவுள்ளன.
இதற்கமைய மத்திய கடற்றொழில் நீரியல்வளத்துறை அமைச்சு அதிகாரிகள் மற்றும் யூ.என்.டீ.பி அதிகாரிகள் மயிலிட்டி துறைமுகத்தை நேரில் பார்வையிட்டுள்ளார்கள்.
மேலும் இந்த அபிவிருத்தி திட்டம் 150 மில்லியன் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படவுள்ளதுடன் துறைமுகத்தை ஆழப்படுத்துதல் மீன்பிடி படகுகளுக்கான எரிபொருள் நிரப்பு நிலையம் அமைத்தல் மற்றும் மீனவர்களுக்கான மலசல கூடம் குடிதண்ணீர் வசதிகள் உள்ளிட்ட பல விடயங்கள் செய்யப்படவுள்ளன.

Related posts: