மன்னார் பிரதேச செயலகத்தில் பெருந்தொகை பொருட்கள் திருட்டு. – தீவிர நடவடிக்கையில் பொலிசார்!
 Saturday, May 20th, 2023
        
                    Saturday, May 20th, 2023
            
மன்னார் பிரதேச செயலகத்தின் களஞ்சியசாலையொன்றில் நடைபெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பில் மன்னார் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பிரதேச செயலகத்தின் களஞ்சியசாலையில் இருந்து அலுமினிய பார்கள், நான்கு எரிவாயு சிலிண்டர்கள், ஐந்து நீர் இறைக்கும் இயந்திரங்கள் உள்ளிட்ட பொருட்கள் திருடப்பட்டுள்ளன.
திருடப்பட்ட சொத்தின் பெறுமதி ரூ.114,984 என மன்னார் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கடந்த மார்ச் மாதம் 17 ஆம் திகதிக்கும் 21ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் இந்த திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் மன்னார் பிரதேச செயலக நிர்வாக அதிகாரியினால் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கொள்ளைச் சம்பவம் தொடர்பில் தமக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
வெளிநாடு செல்ல மாகாணசபை உறுப்பினர்கள் அனுமதி பெற வேண்டும்!
அதிக விலைக்கு வாகனங்களை வாங்க எந்த சூழ்நிலையும் ஏற்படவில்லை - ஓட்டோமொபைல் இறக்குமதியாளர்கள் சங்க தலை...
எந்தவொரு சவால்களையும் எதிர்கொள்ள அரசாங்கம் தயார் - அமைச்சர் பிரசன்ன ரணதுங்க!
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        