மனித உரிமை விடயத்தில் முன்னேற்றம் இருப்பினும் சவால்கள் உள்ளன!
Sunday, July 24th, 2016
இந்த வருடத்தின் முதல் காலாண்டுப் பகுதி வரை இலங்கையின் மனித உரிமை நிலவரங்களில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ள போதிலும், சவால்கள் இன்னும் எஞ்சியிருப்பதாக, பிரித்தானிய அரசின் அறிக்கையொன்று தெரிவித்துள்ளது.
இலங்கையில் கடந்த ஆறு மாதங்களில் சிவில் சமூக மற்றும் மனித உரிமை பாதுகாவலர்களுக்கான சூழல் முன்னேற்றமடைந்துள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
எதுஎவ்வாறு இருப்பினும், குறிப்பாக வடக்குக் கிழக்குப் பகுதிகளில் சவால்கள் எஞ்சியுள்ளதாக, சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பிரித்தானிய வெளிவிவகார அலுவலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள, அறிக்கையொன்றிலேயே இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.
Related posts:
யாழில் ஒரு கோடியே முப்பது இலட்சம் ரூபா செலவில் அங்காடி விற்பனைக் கூடம்!
சமூக இடைவெளியை மீறுபவர்களை கைது செய்ய சாதாரண உடையணிந்த பொலிஸார் கடமையில் - பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித...
இந்தியாவை அச்சுறுத்துவதற்காக இலங்கையை எவரும் பயன்படுத்துவதற்கு அனுமதிக்கமாட்டேன் - இந்திய வெளிவிவகார...
|
|
|


