மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கைக்கு வார இறுதிக்குள் பதில் – அமைச்சர் ஜி.எல் பீரிஸ் அறிவிப்பு!
Tuesday, February 15th, 2022
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது அமர்வில் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சல் பெச்சலட்டால் முன்வைக்கப்படவுள்ள அறிக்கையின் பிரதி இலங்கை அரசாங்கத்துக்குக் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இதற்கு எதிர்வரும் 19 ஆம் திகதிக்கு முன்னர் பதிலளிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் நியாயமான தீர்வு கிடைக்கும் என பாரிய நம்பிக்கையுடன் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் பங்கேற்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பெரும்பாலான சர்வதேச நாடுகள் இலங்கையின் நிலைப்பாட்டை எதிர்ப்பின்றி ஏற்றுக் கொள்வார்கள் என எதிர்பார்ப்பதாகவும் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது அமர்வு ஜெனிவாவில் எதிர்வரும் 28ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதோடு, மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சல் பெச்சலட்டால் இலங்கை தொடர்பில் முன்வைக்கப்படவுள்ள அறிக்கை மார்ச் மாதம் 3ஆம் திகதி விவாதிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|
|


