மத்திய வங்கி ஆளுநரின் பதவிக்காலம் 06 ஆண்டுகள்!

Friday, July 1st, 2016
மத்திய வங்கியின் ஆளுநர் பதவிக்கு புதிதாக நியமிக்கப்படுபவரின் பதவிக் காலம் 6 ஆண்டுகள் ஆகும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

நேற்று (30) ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் ஒரு வருட காலத்திற்கு மத்திய வங்கி ஆளுநரை நியமிப்பதற்கு திட்டமிட்டிருந்ததாகவும், எனினும் புதிதாக நியமனம் பெறப் போகும் மத்திய வங்கி ஆளுநரின் பதவிக் காலம் 6 ஆண்டுகளாகும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை வெற்றியடையச் செய்வதற்காக கட்சியை மறுசீரமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  கட்சியின் ஒழுக்கங்கள், சட்ட திட்டங்களை மீறி செயற்படுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேர்வர்தன தெரிவித்துள்ளார்.

Related posts: