மத்திய வங்கி பிணைமுறி தொடர்பான கோப் குழுவின் அறிக்கை இன்று!

இலங்கை மத்திய வங்கியின் பிணைமுறி வழங்கலில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடி குற்றச்சாட்டு சம்பந்தப்பட்ட கோப் குழுவின் அறிக்கை இன்றைய தினம் பாராளுமன்றத்தில் சமர்ப் பிக்கப்படவுள்ளது.
பிணைமுறி விவகாரம் தொடர்பில் கடந்த வெள்ளிக்கிழமையன்று பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் கோப் குழு கூடியது. இதன்போது பெரும் வாதப் பிரதிவாதங்கள் ஏற்பட்டன.
இந்நிலையில் பிணைமுறி விவகாரம் தொடர்பில் வெவ்வேறு அறிக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.எனினும் மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான முக்கிய அறிக்கை இன்றைய தினம் கோப் குழுவின் தலைவர் சுனில் ஹந்துன்நெத்தியினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நாட்டு வைத்தியரின் கொவிட் தடுப்பு தேசிய ஔடதத்திற்கு ஆயுர்வேத திணைக்களம் அனுமதி!
எரிபொருளை கொள்வனவு செய்வதற்காக ரஷ்யாவிடம் கடனுதவி கோரும் இலங்கை – கலந்துரையாடல்கள் தீவிரமாக இடம்பெறு...
இலங்கையர்களுக்கு இஸ்ரேலில் வேலைவாய்ப்பு - வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவை தெரிவிப்...
|
|