மதுபான பாவனை – இலங்கையில் நாளொன்றுக்கு 40 பேர் அகால மரணம் – மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் அதிர்ச்சி தகவல்!

Friday, November 3rd, 2023

மதுபான பாவனையால் இலங்கையில் நாளொன்றுக்கு சுமார் 40 பேர் அகால மரணமடைவதாக மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் தெரிவித்துள்ளது.

மது அருந்துவதால் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 15,000 பேர் உயிரிழப்பதாக அந்த மையம் தெரிவித்துள்ளது.

மதுவின் வருமானத்தை விட மதுவினால் நாட்டுக்கு ஏற்படும் பொருளாதார சேதம் அதிகம் என ஆய்வுகள் கூறுகிறது.

கடந்த 2015 ஆம் ஆண்டு மதுவின் வருமானம் 10,5,234 மில்லியன் ரூபாவாக இருந்த போது அதில் மதுவால் அரசுக்கு ஏற்பட்ட பொருளாதார சேதம் ஆண்டு 1,19660 மில்லியன் ரூபாய் ஆகும் என கணக்கிடப்பட்டுள்ளது.

மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையத்தின் படி, மது ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக உள்ளது. மற்றும் 17 நிலையான வளர்ச்சி இலக்குகளில் 14 இலக்குகளுக்கு மதுபானம் தடையாக செயல்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்த வகையான மதுபானமும் மனித உடலுக்கு நல்லதல்ல என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளதுடன், மதுபானம் புற்றுநோய், சிரோசிஸ், சிறுநீரகம் மற்றும் இதய நோய்கள் போன்ற பல நோய்களை நேரடியாக பாதிக்கிறது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சாலை விபத்துகள், பெண்களுக்கு எதிரான வன்முறைகள், குழந்தைகள் துஷ்பிரயோகம் போன்றவற்றுக்கு மதுபானம் முக்கிய காரணமாகிவிட்டதாக குறித்த மையம் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


1 கோடியே 17 லட்சம் ரூபா பணத்தினை வாங்கியவர்கள் ஏமாற்றியதனால் ஒரே குடும்பத்தினைச் சேர்ந்த தாய் மற்றும...
நயினாதீவு அம்மன் விவகாரம் தொடர்பிழல் பிரதமரின் அவசர உத்தரவையடுத்து தொடர்புடைய படையினரிடம் விசாரணை!
அறிக்கையை முழுமையாக ஆராய்ந்த பின்னர் காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை - உயிர்த்த ஞாயிறு தாக்குதல் த...