மண்ணெண்ணெய் விநியோகத்தின் போது நாள் ஒன்றுக்கு ஒருவருக்கு அதிகபட்சமாக 5 லீற்றர் மண்ணெண்ணெய் மாத்திரமே விநியோகிக்கப்பட வேண்டும் – வெளியானது சுற்றறிக்கை!

Saturday, May 7th, 2022

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் சந்தைப்படுத்தல் பணியகம் விசேட சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

மண்ணெண்ணெய் விநியோகத்தின் போது நாள் ஒன்றுக்கு ஒருவருக்கு அதிகபட்சமாக 5 லீற்றர் மண்ணெண்ணெய் மாத்திரமே விநியோகிக்கப்பட வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பீப்பாய்கள் மற்றும் கொள்கலன்களுக்கு எரிபொருளை வழங்க கூடாது என குறிப்பிட்டு இதற்கு முன்னர் வெளியிடப்பட்ட சுற்றறிக்கைக்கு மேலதிகமாக இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் நுகர்வோருக்கு மண்ணெண்ணெய் வழங்கும் போது, கடற்றொழில் மற்றும் நீரியல்வளத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட செலுபடியாகும் கடிதத்திற்கு அமைய அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப மண்ணெண்ணெய் வழங்க முடியும்.

இல்லையெனில், இதற்கு பின்னர் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து மண்ணெண்ணெய்யை பெற்றுக் கொள்ள முடியாது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

000

Related posts:

எந்தவொரு தடையுமின்றி பொதுச் சேவைகளை மேற்கொள்ளுங்கள் - அனைத்து அமைச்சுச் செயலாளர்களுக்கும் ஜனாதிபதி அ...
தமிழகத்தின் நிவாரணக் கப்பல் நாளை இலங்கையை வந்தடையும் - இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் அறிவிப்ப...
சிறுகடற்றொழிலாளர்களை பாதுகாக்க ஒத்துழையுங்கள் - சர்வதேச அமைப்புக்களுக்கு அமைச்சர் டக்ளஸ் அழைப்பு!