மண்டைதீவு பொலிஸாரின் காவலரண் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் – இருவர் யாழ்ப்பாணப் பொலிஸாரால் கைது!
Thursday, January 11th, 2024
யாழ்ப்பாணம் – மண்டைதீவு பகுதியில் உள்ள பொலிஸாரின் காவலரண் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக இருவர் யாழ்ப்பாணப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு ஊர்காவற்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
குறித்த சம்பவம் புதன்கிழமை இரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது. தாக்குதலுக்கான காரணம் தெரியவராத நிலையில் பொலிசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தீவகப் பகுதியில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸார், கடற்படை, இராணுவம் என்பன கூட்டாக இணைந்து மண்டைதீவு பகுதியில் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபடுவது குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
அரசுக்கு அவதான நிலையினை சுட்டிக்காட்டி அரச மருத்துவ அதிகாரிகள் எச்சரிக்கை!
இலங்கையில் அமெரிக்க டொலர் சார்ந்த் பொருளாதாரத்தை குறைப்பதற்கான நகர்வுகளில் அரசாங்கம் நடவடிக்கை!
சாவால்களைக் கண்டு அஞ்சாது கொள்கைகளில் உறுதியாகவிருந்து முன்னேற்றிச் செல்லும் சந்ததியை கல்வியின் மூலம...
|
|
|


