மண்டைதீவு கடலில் மீனவர் மரணம்!

மீனவர் ஒருவர் மண்டைதீவு கடற்பரப்பில் மீன்பிடிதொழிலில் ஈடுபட்டிருந்த போது திடீரென மயக்கமடைந்து உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு பிள்ளைகளின் தந்தையான 2 ஆம் வட்டாரம் அல்லைப்பிட்டியைச் சேர்ந்த பொடிபாஸ் ஸ்ரான்லிலாஸ் வயது (64) என்ற இவர் தனது மைத்துனருடன் மண்டைதீவு துறைப்பகுதியில் இருந்து 1 கிலோ மீற்றர் தொலைவில்மீன்பிடித்துக் கொண்டிருந்த போது ஒவ்வாமை காரணமாக திடீரென மயக்கம் ஏற்பட்டுள்ளது.
அவரை உடனடியாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்த போதும் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள்தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் அவரது இறப்பு விசாரணையை யாழ்.போதனா வைத்தியசாலையின் திடீர் இறப்பு அலுவலர் நமசிவாயம் பிறேம்குமார்மேற்கொண்டார்.
Related posts:
வறட்சியால் 17 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு!
வடமாகாணத்தை விடாது துரத்தும் கொரோனா – நவம்பர் மாதத்தில் தொற்றாளர் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளதாக தெரிவி...
அனுமதியின்றி ஊடுருவும் நீர்மூழ்கி கப்பல்களை தடுக்கவும் கண்காணிக்கவும் அமெரிக்காவிடம் உதவி கோரப்பட்டு...
|
|