கொரோனா அச்சுறுத்தல்: பாடசாலை அதிபர்களுக்கு அமைச்சு வழங்கியுள்ள ஆலோசனை!

Thursday, March 12th, 2020

வகுப்பறைகளுக்கு வெளியில் முன்னெடுக்கப்படும் இணை பாடவிதான செயற்பாடுகளுக்கு வரையறை விதிக்குமாறு மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதற்குத் தேவையான ஆலோசனைக் கடிதங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் N.H.M. சந்திராநந்த குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆலோசனைக் கடிதம் மாகாண கல்விப் பணிப்பாளர்களூடாக அனைத்து அதிபர்களுக்கும் அனுப்பிவைக்கப்படவுள்ளது.

இதேவேளை, வெளிநாடுகளுக்க சென்று நாட்டிற்குத் திரும்பியுள்ள மாணவர்களும் பெற்றோர்களும் 14 நாட்கள் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் எனவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

Related posts: