மட்டக்களப்பு மாவட்டத்துக்குரிய மாவட்ட அபிவிருத்தி குழு தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சிவனேசதுரை சந்திரகாந்தன் நியமனம்!!
Tuesday, September 22nd, 2020
மட்டக்களப்பு மாவட்டத்துக்குரிய மாவட்ட அபிவிருத்தி குழு தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சிவனேசதுரை சந்திரகாந்தன் இன்று நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் வைத்து பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ முன்னிலையில் பதவியை பொறுப்பேற்றுக்கொண்டார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை வழக்கில் கடந்த 2015 ஆம் ஆண்டு அக்டோபர் 11 ஆம் திகதி கைது செய்யப்பட்டு 4 வருடங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிக்கின்ற இந்நிலையில், கடந்த பொது தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றத்திற்க்கு தெரிவானார்.
இந்நிலையில் இன்றையதினம் மட்டக்களப்பு மாவட்டத்துக்குரிய மாவட்ட அபிவிருத்தி குழு தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சிவனேசதுரை சந்திரகாந்தன் இன்று நியமனம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கை கடற்படையின் கடந்த வருட வருமானம் 226 கோடி !
நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க பிரித்தானியா விஜயம்!
பேருந்து கட்டணம் 20% மாக அதிகரிக்க கோருகிறது தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம்!
|
|
|


