மட்டக்களப்பு மாவட்டத்தில் கட்சி பணிகளை மேற்கொள்வதற்கு தேசிய எழுச்சி மாநாடு உந்துதலை தந்துள்ளது. சிவா
Tuesday, May 10th, 2016
மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரையில் எமது கட்சி பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருந்ததுள்ளது.
குறிப்பாக யாழ். மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஊடாக எமது மாவட்டத்தில் அரச நியமனங்கள் குறிப்பாக சமுர்த்தி நியமனங்கள் தொண்டர் ஆசிரியர் நியமனங்கள் என்பன வழங்கப்பட்டிருந்தன.
ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எமது செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கிழக்கில் எத்தகைய அபிவிருத்திகளையும் செய்யவில்லையென பொய்ப்பிரசாரங்களைச் செய்து வருகின்றனர். உண்மைகளை மறைக்கும் கூட்டமைப்பினரின் தற்போதைய நிலைப்பாட்டை மக்கள் புரிந்துகொண்டுள்ளனர். இதனால் எமது கட்சியின் செயற்பாடுகளை எமது மாவட்டத்தில் மேலும் வலுச்சேர்ப்பதற்கு இந்த தேசிய எழுச்சி மாநாடு உந்துதலை ஏற்படுத்தியுள்ளது என மட்டக்களப்பு மாவட்ட நிர்வாக செயலாளர் சிவா சுட்டிக்காட்டினார்.
Related posts:
யாழில் நிலத்தடி நீர் இல்லாமல் போகும் அபாயம்!
சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் கைது!
தொடரும் கனமழை காரணமாக மஸ்கெலியா பகுதியில் போக்குவரத்து துண்டிப்பு – மக்கள் தற்காலிக இடங்களில் தங்கவை...
|
|
|


