மசகு எண்ணெய் ஏற்றிய 2 கப்பல்கள் அடுத்த மாதம் இலங்கையை வந்தடையும்!

மசகு எண்ணெய் ஏற்றிய இரண்டு கப்பல்கள் அடுத்த மாதம் நாட்டை வந்தடையவுள்ளதாக வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில் முதலாவது கப்பல் எதிர்வரும் டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி இலங்கையை வந்தடையவுள்ளது.
இதேநேரம் இரண்டாவது கப்பல் டிசம்பர் மாத இறுதியில் நாட்டை வந்தடையும் எனவும் வலுசக்தி அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், எதிர்வரும் ஜனவரி மாதத்தில் மசகு எண்ணெய் ஏற்றிய மற்றுமொரு கப்பலும் நாட்டை வந்தடையும் எனத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சைவப்புலவர், இளஞ் சைவப்புலவர் பரீட்சைகள் ஏப்ரல் மாதம்!
ஜனாதிபதி ஆர்வம் : சுகாதார மற்றும் பாதுகாப்பு பிரிவுகளின் அர்ப்பணிப்பு - தடுப்பூசியில் வல்லரசு நாடுக...
தேர்தலை எவ்வாறு நடத்துவது என்பது குறித்து ஆராய்வதற்கு, அரசியல் அமைச்சரவை ஜனாதிபதியால் நியமனம்!
|
|