மக்கள் விருப்பங்களை ஏற்றே யுத்தம் முடிவுக்கு கொண்டவரப்பட்டது – பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவிப்பு!
Tuesday, June 9th, 2020
2005 ஆம் ஆண்டில் யுத்தத்திற்கு முடிவு கட்டுமாறு நாட்டு மக்கள் தம்மிடம் கோரிக்கை விடுத்ததாக பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இதனை செவிமடுத்து, தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பாதுகாப்பு செயலாளராக நியமித்து யுத்தத்தை வழிநடத்தும் பொறுப்பை ஒப்படைத்ததாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுத்தாலும், யுத்தத்திற்கு முடிவு கட்டி சகல இன மக்களுக்கும் சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்ததாக அவர் தெிவித்துள்ளார்
தமது அரசியல் வாழ்க்கைக்கு ஐம்பது வருடங்கள் பூர்த்தியானதை முன்னிட்டு, நேற்று அரச தொலைக்காட்சியொன்றில் ஒளிபரப்பான நிகழ்ச்சியொன்றில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கையின் சிறந்த அரச நிறுவனமாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவு!
பிரேரணையை ஆதரித்த அமைச்சர்களுடன் அரசைத் தொடரமுடியாது - அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம்!
வெளிநாட்டலுவல்கள் அமைச்சில் தொழில்நுட்பக்கோளாறு!
|
|
|


