மக்கள் வங்கியினால் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அல்ரா சவுண்ட் ஸ்கான் இயந்திரம் வழங்கிவைப்பு!
Monday, December 6th, 2021
மக்கள் வங்கியினால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு 7.5 மில்லியன் பெறுமதியான அல்ரா சவுண்ட் ஸ்கான் இயந்திரம் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டது.
இன்று காலை 9 மணியளவில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற நிகழ்வில் இந்த இயந்திரம் வைத்தியசாலையிடம் கையளிக்கப்பட்டது.
மக்கள் வங்கி ஊழியர்களின் பங்களிப்பில் ஏற்கனவே கொழும்பு போதனா வைத்தியசாலைக்கும் கண்டி போதனா வைத்தியசாலைக்கும் இந்த இயந்திரம் வழங்கப்பட்ட நிலையில் இன்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கும் இவ் இயந்திரம் வழங்கிவைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மக்கள் வங்கியின் பொது முகாமையாளர் ரஞ்சித் கொடித்துவக்கு, யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி, பிரதிப்பணிப்பாளர் ஸ்ரீபவானந்தராஜா உள்ளிட்ட வைத்தியர்கள், வங்கி அதிகாரிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
000
Related posts:
பிரேரணை மீதான விவாதம் ஆரம்பம்!
இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்குள் வருபவர்களால் கொரோனா அபாயம் - தொற்றுநோய் பிரிவு அதிகாரி எ...
துருக்கியின் தூதுவர் ரகிபே டிமெட் - பிரதமர் தினேஷ் குணவர்தன இடையே விசேட சந்திப்பு - புதிய துறைகளி...
|
|
|


