மக்கள் பொறுப்பற்ற செயல் – ஆபத்தான நிலையில் இலங்கை என சுகாதார பிரிவு எச்சரிக்கை!

Monday, April 19th, 2021

சித்திரைப் புத்தாண்டு பண்டிகைக் காலத்தைத் தொடர்ந்து வடக்கு உள்ளிட்ட மூன்று மாகாணங்களில் கோவிட் வைரஸ் தொற்று நோயாளர் தொகை அதிகரிக்கக்கூடும் எனப் பொதுச் சுகாதார பரிசோதகர் சங்கம் எச்சரித்துள்ளது.

வடக்கு மாகாணம், மேல் மாகாணம் மற்றும் வடமேல் மாகாணங்களில் தொற்று பரவல் வேகமடையலாம் என அந்த எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், குருநாகல் மாவட்டத்தில் தித்தவேல்கல கிராமத்தில் 29 கோவிட் நோயாளர்கள் கண்டறியப்பட்டதை அடுத்து அந்த கிராமம் நேற்று முதல் முற்றாக முடக்கப்பட்டது என அப்பிரதேச பொதுச் சுகாதார பரிசோதகர் அறிவித்துள்ளார்.

இந்தக் கிராமத்தில் சுமார் 540 குடும்பங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் பொதுச் சுகாதார பரிசோதகர் மேலும் கூறியுள்ளார்.

Related posts: