மக்கள் கூடுவதைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பொலிஸ்மா அதிபர் பணிப்புரை!

நாடளாவிய ரீதியில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து காவல் நிலையங்களுக்கும் பொலிஸ்மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.
அதற்கமைய நடமாடும் பொலிஸ் ரோந்துப் பணியை அதிகரிக்குமாறும் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
சமூக ஊடகங்கள் மூலம் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபடவும் வன்முறைச் செயல்களில் ஈடுபடவும் மக்கள் தூண்டப்பட்டு வருவதாக புலனாய்வு அமைப்புகள் ஏற்கனவே தெரிவித்துள்ளன.
எனவே குறிப்பிட்ட இடங்களில் மக்கள் கூடுவதைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
அதேவேளை ஏதேனும் கலவர நிலைமை ஏற்பட்டால் அதனைக் கட்டுப்படுத்த, தேவைப்பட்டால் துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கான உத்தரவுகளையும் அவர் வழங்கியுள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஓய்வூதியம் நிறுத்தப்படாது - அடமளிக்கப்படாது - ஓய்வூதிய பாதுகாப்புச் சேவை மத்திய நிலையம்
வீரவசனம் பேசி மக்களை உசுப்பேத்துவது தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு கைவந்த கலை - முன்னாள் பிரதியமைச்சர் ...
அரிசி இறக்குமதிக்கு தடை – அரசாங்கம்!
|
|