மக்களை ஒடுக்கும் தொழிற்சங்க தலைவர்கள் தொடர்பில் உரிய அமைச்சர்கள் உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!

Thursday, July 11th, 2024

மக்களை ஒடுக்கும் தொழிற்சங்க தலைவர்கள் தொடர்பில் உரிய அமைச்சர்கள் உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்

இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்

மேலும் – நாட்டின் பொருளாதார நெருக்கடியுடன் அனைத்தையும் செய்ய முடியாது என்பதை அந்த மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் எனவும், அந்த நிலையை நாட்டு மக்கள் பெரும்பாலும் புரிந்து கொண்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்

அத்துடன் சில தொழிற்சங்க தலைவர்கள் சில அரசியல் நிகழ்ச்சி நிரல்களின் அடிப்படையில் எடுக்கும் தீர்மானங்களினால் மக்கள் அவதியுறுவதாகவும், புகையிரத பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் காரணமாக பயணி ஒருவர் ரயிலில் இருந்து தவறி விழுந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:


பேக்கரி உற்பத்தி பொருட்களை நடமாடும் சேவையூடாக விற்பனை செய்பவர்களுக்கு யாழ்ப்பாணம் பொலிஸாரால் கொரோனா...
பலத்த காற்று - இடியுடன் கூடிய மழை - வளிமண்டலத் தளம்பல் நிலை விருத்தியடைந்து வருவதாக வளிமண்டலவியல் த...
உள்ளூராட்சித் தேர்தல் குறித்து நீதித்துறையே முடிவு செய்ய வேண்டும் - தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிப்பு!