மக்களின் நுகர்விற்கு தேவையானளவு சீனி நாடளாவிய ரீதியில் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது – அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் அறிவிப்பு!
Wednesday, September 15th, 2021
லங்கா சதொச ஊடாக ஒருவருக்கு ஒரு தடவையில் விநியோகிக்கக்கூடிய சீனியின் அளவு 05 கிலோ வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் இதுவரை ஒருவருக்கு அதிகபட்சமாக 3 கிலோ சீனி மாத்திரமே விநியோகிக்கப்பட்டுவந்த நிலையிலேயே தற்போது அதனை 5 கிலாவாக அதிகரித்துள்ளதாக லங்கா சதொசவின் தலைவர் ரியர் அட்மிரல் ஆனந்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அத்துடன் சுகாதார ஒழுங்கு விதிகளை பின்பற்றி ஒரு தடவையில் 5 நபர்களுக்கு மாத்திரம் பொருள் கொள்வனவிற்கு அனுமதி வழங்கப்படுவதாலேயே, சீனியை கொள்வனவு செய்ய செல்வோர் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தேவையான அளவு சீனி நாடளாவிய ரீதியில் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் செனரத் நிவுன்ஹல்ல தெரிவித்துள்ளார்.
அத்துடன் நாட்டு மக்களுக்கு நுகர்விற்கு தேவையான அளவு சீனி உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதனிடையே தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதால், தூர பிரதேசங்களிலுள்ள சில வியாபார நிலையங்களுக்கு சீனியை பகிர்ந்தளிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் செனரத் நிவுன்ஹல்ல தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|
|


