மக்களின் நலனுக்காகவே காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் – பிரதியமைச்சர் அஜித் பி பெரேரா!
Sunday, July 23rd, 2017
மக்களின் தேவை மற்றும் நலனுக்காகவே காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் அமைக்கப்படுகிறது சர்வதேசத்தை தேவையை நிறைவேற்றுவது அல்ல என்று பிரதியமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் நாட்டின் அனைத்து மக்களுக்கும் பெருமையுடன் வாழக்கூடிய சூழலை அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளது. எதிர்காலத்தில் காணாமல் போனோர் சம்பவங்கள் இடம்பெறாத வகையில் இருப்பதற்கு இவ்வாறான பொறிமுறை ஒன்று தேவை இருந்ததாகவும் பிரதியமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இத்தகைய அலுவலகம் ஒன்றை அமைப்பதன் மூலம் படையினருக்கு எதிராக குற்றச்சாட்டை சுமத்துவது அல்லது அவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் போன்றவை எந்த வகையிலும் இடம்பெறாது. இருப்பினும் காணாமல் போனோர் தொடர்பில் என்ன நடந்தது என்பதை அவர்களது குடும்பங்களுக்கு அறிவித்தல், தேவையான நிவாரணத்தை வழங்குவதல் ஆகிய விடயங்கள் இதன்மூலமாக இடம்பெறும் என்று பிரதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|
|


