மக்களின் கோரிக்கைகளை சரியாக நிறைவேற்றுபவர்கள் ராஜபக்ஷர்களே – இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த தெரிவிப்பு!
Tuesday, March 8th, 2022
மக்களின் கோரிக்கைகளை சரியாக நிறைவேற்றுபவர்கள் ராஜபக்ஷர்களே என்பதை நான் பொறுப்புடன் கூறுகின்றேன் என கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த தெரிவித்துள்ளார்.
உங்களுக்கு வீடு – நாட்டிற்கு எதிர்காலம் வீடமைப்பு உதவித் திட்டத்தின் ஹம்பாந்தோட்டை மாவட்ட ஆரம்ப விழாவின் போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் – “இந்த திட்டத்திற்கான முழு ஆலோசனையும், அனுசரணையும் மற்றும் வழிகாட்டுதலும் பிரதமரால் வழங்கப்பட்டது. இந்த வருடத்திற்கான எமது இலக்கு 30,000 வீடுகளாகும். இதுவரை 24000 வீடுகளின் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன.
உண்மையான பிரச்சினையை அடையாளம் கண்டு உண்மையான பிரச்சினைக்கு பதிலளிக்கும் அரசியல் பிரமுகர்கள் இந்த நாட்டில் மிகக் குறைவு.
அவ்வாறு உண்மையான பிரச்சினைக்கு பதில் சொல்லக்கூடிய அரசியல் பிரமுகர் ஒருவர் இருப்பாராயின் அது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஒருவரே.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கீழ் மக்களுக்கு நியாயமானதை வழங்குபவர்கள் தற்போதைய பிரதமர் உட்பட இந்த ராஜபக்ஷர்களே தவிர வேறு யாரும் இல்லை என்பதை இந்த நாட்டு மக்களுக்கு நாம் பொறுப்புடன் கூறுகின்றோம்.
மேலும், மக்களின் கோரிக்கைகளை சரியாக நிறைவேற்றுபவர்கள் இந்த ராஜபக்ஷர்களே என்பதை நான் பொறுப்புடன் கூறுகின்றேன்.” என்றும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|
|


