மக்களின் காணிகள்  மக்களிடம் வழங்கவேண்டும்-பான்கீ மூன்!

Friday, September 2nd, 2016

இராணுவத்தின் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பொதுமக்களின் காணிகளை விடுவித்தால் மாத்திரமே, மக்கள் தங்களது சொந்த வீடுகளுக்கு திரும்ப முடியும் எனவும் ஐ.நா பொதுச் செயலாளர் நாயகம் பான் கீ மூன் வலியுறுத்தியுள்ளார் .

கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடக அமைப்புக்களுடைனான சந்திப்பில் உரையாற்றுகையில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை குறைத்து நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டுமாயின், வடக்கு கிழக்கில் நிலை கொண்டுள்ள பாதுகாப்புப் படையினர் குறைக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்திருந்தாலும் இன்னும் நிறைவேற்ற வேண்டிய கடமைகள் காணப்படுகின்றன.

நிலையான அபிவிருத்தி மற்றும் சமாதானத்திற்கு இடையிலான தொடர்பு குறித்து பேசுவதில் பெருமையடைகின்றேன்.
இராணுவத்தினர் தம்வசம் வைத்துள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன்மூலமே மக்கள் தங்களது சொந்த வீடுகளுக்கு திரும்ப முடியும்.

கொடூர யுத்தத்தினால் ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளதோடு, அவர்களுக்கு மனிதாபிமான உதவிகள் அவசியமாக இருந்தன. துரித நல்லிணக்கம் மற்றும் சமாதானத்தைக் கட்டியெழுப்புவது தொடர்பில் நான் அழைப்பு விடுக்கின்றேன்.

விரிவான இடைக்கால நீதிப் பொறிமுறை மற்றும் அரசியல்யாப்பு சீர்திருத்தத்திற்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுப்பதாக பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.

hKEcVZa copy

Related posts: