மக்களிடம் இருந்து எம்மை துரத்த நினைத்தவர்கள் மக்களினால் துரத்தப்பட்டார்கள்: வேலனையில் தோழர் ஜெகன் முழக்கம்!
Sunday, June 14th, 2020
கடந்த காலங்களில் தமிழ் மக்களிடம் இருந்து ஈ.பி.டி.பி. கட்சியையும் எமது செயலாளர் நாயகத்தையும் துரத்திவிட கங்கணம் கட்டியவர்களை மக்கள் விரட்டி விட்டுள்ளமையை வரலாறு பெருமையுடன் பதிவு செய்து வைத்துள்ளது என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வீ.கே. ஜெகன் தெரிவித்துள்ளார்.
வேலணை பிரதேச கட்சி செயற்பாட்டாளர்களுக்கும் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கும் இடையில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இதனை தெரிவித்தார்.
மேலும், அண்மையில் மயிலிட்டி தேவியார் கொல்லை கண்ணகி அம்மன் ஆலயத்தின் அடிக்கல் நாட்டியபோது, செயலாளர் நாயகத்தின் கைத்தொலை பேசியில் நாக பாம்பு காட்சியளித்தமையை சுட்டிக் காட்டிய தோழர் ஜெகன், வடக்கில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கரங்கள் பலப்படப் போவதற்கான அறிகுறியே குறித்த தெய்வீக காட்சி எனவும் சுட்டிக் காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|
|





