மக்களது வாழ்வியல் ஒளிபெற நாம் என்றும் துணைநிற்போம் – ஈ.பி.டி.பி.யின் யாழ்.மாவட்ட நிர்வாக செயலாளர் வி.கே. ஜெகன்!
Sunday, September 18th, 2016
மக்களது வாழ்வாதாரமும் அதனை முன்னிறுத்திய செயற்றிட்டங்களூடான பணிகளுமே எமது மக்களுக்கு இன்று முதன்மையான தேவையாக உள்ளது. அத்தகைய மக்களின் தேவைகளை பெற்றுக்கொடுத்து மக்களது வாழ்வியலில் விருத்திகளை மேம்படுத்த செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அயராது பாடுபட்டுவருகின்றார் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் கட்சியின் யாழ். மாவட்ட நிர்வாக செயலாளருமான கா வேலும்மயிலும் குகேந்திரன் (வி.கே.ஜெகன்) தெரிவித்துள்ளார்.
வேலணை திருவள்ளுவர் சனசமூக நிலைய மண்டபத்தில் இன்றையதினம் (18) நடைபெற்ற சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது குறித்த பகுதி மக்கள் தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளான மின்சாரம், வீடமைப்பு, குடிநீர் விநியோகம், வீதி அபிவிருத்தி, சுயதொழில் வாய்ப்புக்கான உதவிகள் மற்றும் விளையாட்டுக்கழக அபிவிருத்திக்கான உதவிகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக எடுத்துக்கூறி அவற்றை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு தருமாறும் வலியுறுத்தினர்.
மக்களது பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்ட வி.கே.ஜெகன் குறித்த விடயங்களை செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டுசென்று துறைசார் அதிகாரிகளூடாக தீர்வுகளை பெற்றுத்தருவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாக தெரிவித்திருந்தார்.



Related posts:
|
|
|


