மக்களது அபிலாஷைகளுக்கு ஒளியூட்டுவோம் – ஈ.பி.டி.பியின் திருமலை மாவட்ட அமைப்பானர் புஸ்பராசா தெரிவிப்பு!
Wednesday, November 29th, 2017
கடந்த காலங்களைப் போலல்லாது இன்று மக்களின் மனங்களில் ஒரு மாற்றம் தேன்றியுள்ளது. இது எமக்கு ஒரு நம்பிக்கையை கொடுக்கும் மாற்றமாகவே உள்ளது இந்த மாற்றத்தை நாம் எமக்கானதாக வென்றெடுத்து தமிழ் மக்களது அபிலாஷைகளுக்கும் தேவைப்பாடுகளுக்கும் தீர்வுகண்டுகொடுப்போம் – என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கட்சியின் திருமலை மாவட்ட அமைப்பாளர் தியாகராஜா புஸ்பராஜா தெரிவித்துள்ளார்.
திருமலை மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகத்தில் இன்றையதினம் கட்டுப்பணத்தை செலுத்தியபின்னர் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேசசபை தம்பலகாமம் பிரதேச சபை ஆகிய உள்ளூராட்சி மன்றங்களுக்கான கட்டுப்பணத்தை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி செலுத்தியுள்ளது.
உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் தங்கராசா புஸ்பராசா மற்றும் கட்சியின் உப்புவெளிப் பிரதேச நிர்வாகச் செயலாளர் நகுலன் ஆகியோரால் திருமலை மாவட்ட தேர்தல் அத்தியட்சகர் பணிமனையில் இன்றைய தினம் செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|
|




