மகாத்மா காந்தியின் 78 ஆவது சிரார்த்த தினம் இன்று – யாழ்பாணத்தில் நினைவுகூரல்!
Friday, January 30th, 2026
……
பாரத தேசத்தின் தேசபிதா மகாத்மா காந்தியுன் 78 ஆவது சிரார்த்த தினம் இன்று (30)யாழ்பாணத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் உள்ள இந்திய துணை தூதரகம் ஏற்பாடு செய்த குறித்த நினைவு கூரல் நிகழ்வின் போது யாழ் போதனா வைத்தியசாலைக்கு முன்னால் அமைந்துள்ள காந்தியின் நினைவுத்தூவிக்கு இந்திய துணை தூதுவர் சாய் முரளி அவர்கள் மலர் மாலை அணிவித்து காந்தி அவர்களை நினைவு கூர்ந்தார்.
வாழ்நாள் பேராசிரியர் மோகனதாஸ் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் ரீ. சத்தியமூர்த்தி, கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் அதிபர் சொல்லருவி லலிசன், மறுவன்புலவு சச்சிதானந்தம், காந்தி சேவா நிலைய அங்கத்தவர்கள், யாழ்ப்பாணம் இந்திய துணை தூதரக அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது உரையாற்றிய யாழ்ப்பாணம் இந்திய துணை தூதுவர் சாய் முரளி அவர்கள், காந்தி அவர்களின் உண்மை சத்தியம் அவரின் வாழ்க்கை தத்துவங்கள் கோட்பாடுகள் தற்போது உள்ளவர்களுக்கு தேவையான ஒன்றாக காணப்படுவதுடன் உலகத்தில் வாழும் இந்த உயிரினங்கள் மற்றும் மக்கள் அவர்களின் வழிகளை பின்பற்றி சத்தியத்தின் நேர்மையில் வாழ்வது சிறந்தது என உதாரணமாக தெரிவித்தார்.
காந்தியவர்கள் இறக்கும் வரை சத்தியம் நேர்மை ஆகியவற்றை கடைபிடித்து வாழ்ந்ததே இன்று அவரை நாங்கள் அனுஷ்டிக்க காரணமாக உள்ளது. இறுதி வரை அவர் அகிம்சைக்காக போராடியவர்.
வாழ்க்கையில் எந்த ஒரு துன்பம் வந்தாலும் சத்தியம் உண்மை ஆகியவற்றை நாங்கள் கைவிடக்கூடாது என்றும் இறுதிவரை தர்மமே நிலை வரும் என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
Related posts:
|
|
|


