போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை – மைச்சர் சரத் வீரசேகர எச்சரிக்கை!

போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர எச்சரித்துள்ளார்.
நாளை கொழும்பில் நடைபெறவுள்ள ஐக்கிய மக்கள் சக்தியினரின் போராட்டத்தை தடுக்கும் வகையில் நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்..
போராட்டத்திற்கு தடை விதிக்குமாறு சுகாதாரத்துறை ஏற்கனவே நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஆர்ப்பாட்டத்தின் ஊடாக கொரோனா தொற்று பரவுவதற்கான சாத்தியம் காணப்படுவதால் மக்கள் ஒன்று கூடுவதற்கு தன்னால் இடமளிக்க முடியாது என்றும் சரத் வீரசேகர கூறியுள்ளார்.
அதனைமீறி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்துவதற்கு முன்னின்று செயற்படுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்புடும் என்றும் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|