போதைப் பொருள் பாவனையைக் கட்டுப்படுத்த பல்கலை மாணவரின் பங்களிப்பு அளப்பரியது – யாழ்.மாவட்டச் செயலாளர் வேதநாயகன்!

யாழ்.மாவட்டத்தில் அதிகரிக்கும் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்தும் செயற்பாட்டில் பல்கலைக்கழக மாணவர்களின் பங்கானது அளப்பரியது என்று யாழ்.மாவட்டச் செயலாளர் நா.வேதநாயன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்திக் ஏற்பாட்டில் பல்கலைக்கழக புதுமுக மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு முன் நடவடிக்கை நேற்று முன்தினம் யாழ்ப்பாண வீரசிங்க மண்டபத்தில் மாவட்டச் செயலாளர் வேதநாயகன் தலைமையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் தலைமையுரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்
நாட்டில் அதிகரிக்கும் போதைப்பொருள் பாவனையின் வேகமானது கவலை அளிப்பதாகவே உள்ளது. அதனால் இதனைக் கட்டுப்படுத்த வேண்டியது அனைவரினதும் கடமையாகவுள்ளது. அனைவரும் ஒருங்கிணைந்து செயற்படுவதன் மூலமே கட்டுப்படுத்தக் கூடியதாகவுள்ளது. மாணவர்கள் முதல் முதியவர் வரைக்கும் முன்னெடுப்பதோடு அரச ஊழியர் முதல் சாதாரண பொதுமக்கள் வரைக்கும் இணைந்த செயற்பாட்டை மேற்கொள்வதன் மூலம் போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.
எமது நாட்டிலும் தற்போது எமது மாவட்டத்திலும் அதிகரிக்கும் போதைப்பொருளை கட்டுப்படுத்தும் பல்கலைக்கழக மாணவர்களினது பங்களிப்பு அளப்பரியது. இதனை உணர்ந்தே மாணவர்களிடத்தில் இது போன்ற செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. யாழ்.மாவட்டத்தில் 60 வீதமானோர் மது பாவனை, புகை பிடித்தல் மற்றும் ஏனைய போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளனர். என்று யாழ்.மாவட்டச் செயலாளர் நா.வேதநாயன் தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|