போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த விசேட பொறிமுறை – யாழ்குடாநாட்டில் களமிறக்கப்பட்டது இராணுவம் – பொதுமக்களின் முழுமையான ஒத்துழைப்பை கோருகிறார் யாழ் மாவட்ட இராணுவ கட்டளை தளபதி!

Tuesday, November 8th, 2022

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்தும் முயற்சியாக நேற்றுமுதல் இராணுவத்தினரால் முக்கியமான இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து வீதியால் பயணிப்போரை சோதனையிடும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண ராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் போதைபொருள் பாவனை அதிகரித்துள்ள நிலையில் பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களை இலக்கு வைத்து இந்த போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்ற நிலையில் குறித்த விடயம் தொடர்பில் அண்மையில் விஜயம் ஒன்றை நீதி அமைச்சர் மேற்கொண்டிருந்தார்.

இதன்போது போதை பொருள் பாவனையை கட்டுப்படுத்தும் முகமாக யாழில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் இடம்பெற்றிருந்த நிலையில் வடக்கு மாகாண ஆளுநரின் பரிந்துரைக்கு அமைய யாழின் முக்கியமான இடங்களில் இராணுவத்தினரால் சோதனை சாவடி அமைக்கப்பட்டு போதை பொருள் விநியோகம் மற்றும் போதை பொருள் பாவிப்போர் கைது செய்யப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்..

மேலும் போதை பொருள் விற்பனை செய்வோர் மற்றும் போதைபொருள் பாவிப்போர் தொடர்பில் ஏதாவது தகவல்கள் தெரிந்தால் பொதுமக்கள் அருகில் உள்ள இராணுவ முகாமில் தகவல்களை தெரிவிக்கும் இடத்தில் குறித்த சம்பவங்களுடன் தொடர்புடையவர்களை கைது செய்ய உதவியாக இருக்கும் என தெரிவித்துள்ளார். இருப்பினும், இன்றிலிருந்து யாழில் போதை பொருளை கட்டுப்படுத்தும்மமுகமாக இராணுவத்தினரால் யாழின் முக்கிய இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்படும். எனவே பொதுமக்கள் இந்த விடயத்திற்கு நமக்கு பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளதுடன்  பொதுமக்கள் யாழ்ப்பாணத்தில் போதை பொருள் பாவனையை குறைப்பதற்கு தமக்கு முழு ஒத்துழைப்பினையும் வழங்க வேண்டும் எனவும் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: