போதைப்பொருள் கடத்தலுக்கு மரண தண்டனையே தீர்வு – அமைச்சர் டிரான் அலஸ் வலியுறுத்து!

போதைப்பொருள், கொலை, பாலியல் வல்லுறவு போன்ற குற்றங்களுக்கு மரண தண்டனை அமுல்படுத்தப்பட வேண்டும் என்பதே தனது தனிப் பட்ட கருத்து என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் பரவல் எந்த வகையிலேனும் கட்டுப்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர், போதைப்பொருள் வியாபாரத்தைக் கைவிடுமாறு போதைப் பொருள் கடத்தல்காரர்களிடம் கோரிக்கை விடுப்பதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் போதைப்பொருள், கொலை, பாலியல் வல்லுறவு போன்ற குற்றங்களுக்கு மரண தண்டனை அமுல்படுத்தப்பட வேண்டும் என்பதே தனது கருத்து எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
ரக்பி வீரர் தாஜூடினின் உடல் பாகங்கள் எடுத்துச் செல்லப்பட்டமை குறித்து விசாரணை?
வித்தியா படுகொலை வழக்கு: முக்கிய சாட்சி இன்று!
65 ஏக்கரில் சர்வதேச தரத்திலான சிறைச்சாலை!
|
|