போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கு முன்மொழிவுகளையும் கருத்துக்களையும் அனுப்பிவைப்பதற்கு பொதுமக்களுக்கு வாய்ப்பு!

Saturday, September 16th, 2023

நாட்டில் வேகமாகப் பரவிவரும் போதைப்பொருள் அச்சுறுத்தலை உடனடியாகக் கட்டுப்படுத்துவதற்கும் ஒழிப்பதற்கும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்து முன்மொழிவுகளையும் கருத்துக்களையும் அனுப்பிவைப்பதற்கான வாய்ப்பு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

நாட்டில் வேகமாகப் பரவிவரும் போதைப்பொருள் அச்சுறுத்தலை உடனடியாகக் கட்டுப்படுத்துவதற்கும் ஒழிப்பதற்கும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆராய்ந்து அது பற்றிய அவதானிப்புகளையும் விதப்புரைகளையும் நாடாளுமன்றத்திற்குச் சமர்ப்பிப்பதற்காக கடந்த யூன் 08 ஆம் திகதி அமைக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட குழுவினால் இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தலைமையிலான இந்த விசேட குழு பதினொரு பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. இதன் செயலாளராக நாடாளுமன்ற உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ஸ அபேரத்ன செயற்படுகின்றார்.

பொதுமக்கள் தமது முன்மொழிவுகளையும், கருத்துக்களையும் எழுத்துமூலம் legis_com@parliament.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது செயலாளர், பாராளுமன்ற விசேட குழு, இலங்கைப் பாராளுமன்றம், ஸ்ரீ ஜயவர்தனபுர, கோட்டே என்ற முகவரிக்குத் தபால் மூலம் அனுப்பிவைக்க முடியும். இதற்கமைய ஆர்வமுள்ள தரப்பினர் எதிர்வரும் ஒக்டோபர் 12ஆம் திகதிக்கு முன்னர் தமது முன்மொழிவுகளையும், கருத்துக்களையும் அனுப்பிவைக்க முடியும்.

தமது கருத்துக்களை எழுத்துமூலம் சமர்ப்பிக்கும் நபர்களிடமிருந்து அவ்விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்வதற்கு குழு அவசியமென தீர்மானிக்கும் பட்சத்தில் ஆவணங்களுடன் அதன் முன் தோன்றுமாறு சம்பந்தப்பட்ட தரப்பினர் அழைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்து.

Related posts:


நாட்டின் பல பாகங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ய வாய்ப்பு - வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூ...
தனியார் பேருந்துகளை நடத்துநர்களின்றி இயக்க யோசனை தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் கையளிப்பு - இலங்க...
தெல்லிப்பளை ஒட்டகப்புலத்தில் விடுவிக்கப்பட்ட காணிகளுக்குள் பொதுமக்கள் பிரவேசிப்பதற்கான பாதைகள் திறக்...