போதியளவான எரிபொருள் இருப்புக்கள் உள்ளன – அனாவசியமாக வரிசையில் நிற்க வேண்டாம் எனவும் அமைச்சர் கஞ்சன விஜேசேகர வலியுறுத்து!
Wednesday, March 29th, 2023
எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் என்று பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் போதிய எரிபொருள் இருப்புக்கள் உள்ளதாகவும் விநியோகம் தொடர்வதாகவும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தொழிற்சங்க ஊழியர்களை கடமைக்கு செல்லவிடாமல் தடுத்ததால் எரிபொருள் விநியோகத்தில் வழக்கமான தாமதம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை பெற்றோலிய ஊழியர்களின் தொழிற்சங்க நடவடிக்கையினால் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என மின்வலு மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை வழமை போன்று முன்னெடுப்பதற்கு பாதுகாப்பு தரப்பினரின் ஆதரவையும் பெற்றுக்கொள்ளவுள்ளதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
மேலும், நாட்டில் போதுமான எரிபொருள் இருப்பு இருப்பதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படவில்லை என ஜனாதிபதி ஊடகப் பிரிவும் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
இதன்காரணமாக எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் அனாவசியமாக வரிசையில் நிற்க வேண்டாம் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு மேலும் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது
00
Related posts:
|
|
|


