போட்டியிடுவதா இல்லையா – கால அவகாசம் நிறைவு!

Tuesday, March 10th, 2020

பொதுத்தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா என்பது குறித்து அறிவிப்பதற்கு அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்திருந்தது.

பொதுத்தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டு 7 தினங்களுக்குள் அரசியல் கட்சிகள் குறித்த தேர்தலில் போட்டியிடுவதா, இல்லையா என்பது தொடர்பில் தமது நிலைப்பாடுகளை அறிவிக்க வேண்டும் என்று தேர்தல்கள் சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, 20 க்கும் அதிகமான கட்சிகள் இந்த முறை தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன கூட்டணி, ஐக்கிய தேசிய கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி ஆகியன எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளதாக அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இதேவேளை சின்னத்தை மாற்றுவதற்கான காலவகாசம் நேற்றுடன் நிறைவடைந்துள்ள நிலையில் ஐக்கிய மக்கள் சக்தி, தேர்தலில் தொலை பேசி சின்னம் ஊடாகவே போட்டியிட முடியும்.

அவ்வாறு இல்லையெனில் புதிய ஜனநாயக முன்னணியின் கீழ் அன்னப்பறவை சின்னத்தின் கீழ் போட்டியிட வேண்டும்.

இந்த நிலையில் சின்னத்தை மாற்றும் காலம் நிறைவடைந்துள்ளமை அடுத்து பொது தேர்தலில் போட்டியிடும் சின்னம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார கூறுகையில் சின்னத்தின் ஊடாக ஐக்கிய மக்கள் சக்தி எதிர்வரும் பொது தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ளதால் இந்த கூட்டணியில் இணையாத ஐக்கிய தேசிய கட்சியின் ஏனைய தரப்பினர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இணைந்து கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

Related posts: