போக்குவரத்து சேவைகள் வழமைக்கு திரும்பியது.

வடக்கு மாகாண போக்குவரத்து சேவையின் பிரதானியாக கேதீஸ்வரன் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளமையை அடுத்து போக்குவரத்து சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளது.
வடமாகாணத்தில் அரச பேருந்து பணியாளர்களுக்கும், போக்குவரத்து சபைக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டதை அடுத்து போக்குவரத்து சேவைகளை வழமைக்கு கொண்டுவர வடக்கு மாகாண போக்குவரத்து சபை ஊழியர்கள் இணங்கியுள்ளனர்.
வடபிராந்திய போக்குவரத்து சபையின் பிரதானிகள் இருவரை இடமாற்றம் செய்யக் கோரி இந்த போராட்டம் நடத்தப்படுகிறது. இதுதொடர்பில் வடக்கு அரச பேருந்து பணியாளர் சங்கங்களுக்கும், போக்குவரத்து அமைச்சர் மற்றும் போக்குவரத்து சபை அதிகாரிகளுக்கும் இடையில் ஏற்பட்ட இணக்காப்பாட்டின் அடிப்படையில் குறித்த பிரதானிகளை இடமாற்றம் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டதை அடுத்து போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.
Related posts:
உணவக ஊழியர்களுக்கு மருத்துவச்சான்று கட்டாயம்!
75 ஆவது சுதந்திர தினத்தை பெருமையுடன் கொண்டாட தயாராகுங்கள் - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழைப்பு!
2022-2023 கல்வியாண்டில் 45,000 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தகுதி - பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழ...
|
|