பொலிஸ் ஊடகப் பேச்சாளராக ருவன் குணசேகர
Sunday, June 25th, 2017
புதிய பொலிஸ் ஊடக பேச்சாளராக பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி ருவன் குணசேகர நியமிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸ் ஊடக பேச்சாளராக கடமையாற்றிய உதவி பொலிஸ் மாஅதிபர் பிரியந்த ஜயகொடி சுகவீனம் காரணமாக சிகிச்சை பெற வேண்டியுள்ளதால், பொலிஸ் மாஅதிபரின் ஆலோசனைக்கமைய பொலிஸ் ஊடக பேச்சாளர் பதவியிலிருந்து இராஜினமா செய்வதாக அறிவித்துள்ளார்.இதனையடுத்து குறித்த பதவிக்கு பொலிஸ் மாஅதிபரினால் பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி ருவன் குணசேகர நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
பாரதத்தின் பிரதமராக பதவியேற்றார் நரேந்திர மோடி!
மகிழ்ச்சி நிறைந்த நாளாக அமையட்டும் - ரமழான் திருநாள் வாழ்த்துச் செய்தியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெ...
கடலோரப் பாதையில் புகையிரத தாமதத்தை குறைக்கும் வகையில் புதிய நேர அட்டவணை - புகையிரத திணைக்களம் தெரிவி...
|
|
|


