பொலித்தீன், லன்ச்ஷீட் உற்பத்தி – விற்பனை செய்தால் ஒரு இலட்சம் ரூபா அபராதம் – சுற்றாடல் அமைச்சு!
Friday, July 16th, 2021
ஓகஸ்ட் முதலாம் திகதிமுதல் நாட்டில் சில வகை பொலித்தீன் மற்றும் லன்ச்ஷீட் பாவனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, லன்ச்ஷீட் மற்றும் பொலித்தீன்களை உற்பத்தி செய்தவதற்கும், விநியோகிப்பதற்கும், விற்பனை செய்வதற்கும் தடை விதிக்கப்படவுள்ள நிலையில், அதனை மீறுபவர்களுக்கு ஒரு இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றாடல் அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறிருப்பினும், சுற்றாடலுக்கு தீங்கு விளைவிக்காத லன்ச்ஷீட்களை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பாரிஸ் உடன்படிக்கையில் இலங்கை அடுத்தவாரம் இணையும்!
17 மாவட்டங்கள் கடும் வறட்சியால் பாதிப்பு!
மதுபான உரிமம் வழங்கும் முறைமையினை திருத்தியமைக்க இலங்கை மதுவரித் திணைக்களம் தீர்மானம்!
|
|
|


